என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பொதுமக்கள் எதிர்பார்ப்பு"
- பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- வெயிலிலும் நிற்க வேண்டிய நிலை உள்ளது.
குனியமுத்தூர்,
கோவை பொள்ளாச்சி ரோடு சுந்தராபுரம் தக்காளி மார்க்கெட் எதிர்புறம் பஸ் நிறுத்தம் அமைந்துள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் டவுன் பஸ், வெளியூர் செல்லும் பஸ்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் வாகனங்களும் நின்று விட்டு தான் செல்லும். எனவே இந்த பேருந்து நிறுத்தத்தில் பயணிகளின் கூட்டம் எந்த நேரமும் அதிகமாக காணப்படும்.
இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் பயணிகள் மழையிலும் மற்றும் வெயிலிலும் நிற்க வேண்டிய நிலை உள்ளது. நிழல் கூட இல்லாததால் நிற்பதற்கு கூட இடமில்லாமல் நடுரோட்டிற்கே பயணிகள் வந்து நிற்கும் நிலையை காண முடிகிறது. இதனால் அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு கூட வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே இந்த இடத்தில் விரைவில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்களும் பயணிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- 2ஆண்டுகளுக்கு மேல் சரிசெய்யப்படாமலே உள்ளது.
- பொதுமக்கள் அப்பகுதியில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
கோத்தகிரி,
கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் இருந்து நூலகம் செல்லும் வரையிலான சாலை வாகனங்கள் செல்லவும், பொதுமக்கள் நடந்து செல்லவும், சரக்கு வாகனங்கள் செல்ல ஒரு முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் நெரிசல்கள் அதிகமாக காணப்படும். இந்த சாலையின் ஒரு பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்வதற்க்காக நடைபாதையும் மறு பகுதியில் லாரி மற்றும் வேன்கள் நிறுத்தும் ஸ்டாண்ட் ஆகா உள்ளது இதற்கு இடையில் இருக்கும் சாலை பழுதடைந்து கடந்த 2ஆண்டுகளுக்கு மேல் சரிசெய்யப்படாமலே உள்ளது. மழைக்காலங்களில் இந்த சாலையில் உள்ள குழிகளில் மழை நீர் தேங்கி பொதுமக்கள் அப்பகுதியில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் இந்த சாலையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் இந்த நீர்த்தேக்கம் கட்டப்பட்டது
- மாணவர்களை அழைத்து செல்லக்கூடிய குறைந்த செலவு சுற்றுலாத்தலமாகவும் அமையும்.
பாப்பிரெட்டிப்பட்டி .
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் வாணியார் நீர்த்தேக்கம் உள்ளது. சேர்வராயன் மலை தொடர்களில் இரு மலைகளுக்கு இடையில் 1985-ம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் இந்த நீர்த்தேக்கம் கட்டப்பட்டது
இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பாங்கான பகுதியில், மிகவும் அழ கான தோற்றத்துடன், மிகவும் ரம்மியமாக, அணைக்கு செல்லும் சாலை இருபுறங்களிலும் தென்னந்தோப்பு, பாக்கு தோப்பு, பல வகை பழ தோட்டம், பசுமை போர்த்திய சோலைவனத்திற்குள் செல்வது போல் காணப்படுகின்றது.
இந்த வாணியார் நீர்த்தேக்கம் சுமார் 35 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் சுற்றுலாத்த லமாக மாற்றப்படாமல் உள்ளது. நீர்த்தேக்கத்தின் முன் பகுதியில் 100 ஏக்கர் நிலப்பரப்பு முட்புதர்களாகவும், குடிகாரர்கள்,சமூக விரோத செயல்களில் ஈடுபவர்களின் புகலிடமாகவும் இருந்து வருகிறது
இப்பகுதியில் உள்ள இடங்களை தூய்மை செய்து சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், மலர் பூங்காக்கள், வனவிலங்குகள் பண்ணை, சிறுவர்களை கவரும் விளையாட்டு திடல்கள், தாவரங்களை தெரிந்து கொள்ள தாவரவியல் பூங்கா போன்றவை அமைத்தால் சிறந்த சுற்றுலா தளமாக அமையும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்
எனவே மாவட்ட நிர்வாகம் பாப்பி ரெட்டிப்பட்டி, அரூர் ,பொம்மிடி, கடத்தூர் என சுமார் 40 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதியில் வாழம் மக்களின் சுற்றுலாத்தலமாகவும் ,குறைந்த செலவில் சென்று வரக்கூடிய பொழுதுபோக்கு மையமாகவும் அமையும். மேலும் இப் பகுதியில் உள்ள பள்ளிகள், கல்லூரி, மாணவர்களை அழைத்து செல்லக்கூடிய குறைந்த செலவு சுற்றுலாத்தலமாகவும் அமையும்.
எனவே மாவட்ட நிர்வாகம் பாப்பி ரெட்டிபட்டி பகுதியில் சுற்றுலாத்தலம் எதுவும் இல்லாததால் இப்ப பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று வாணியாறு நீர்த்தேக்கத்தை ஒரு சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டுமென இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இந்த வாணியாறு நீர் தேக்கத்தை சுற்றி பார்க்க ஏற்கனவே குடும்பம், குடும்பமாக பொதுமக்கள் வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தனியார் போக்குவரத்தும் தற்போது முடங்கி விட்டதாக கூறப்படுகிறது
- அரசு சார்பில் மினி பஸ் இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் வத்தல்மலையில் சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதிக்காக ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த பொது ரூ.16 கோடி செலவில் தார் சாலைகள் அமைக்கப்பட்டது.
பின்னர் அடுத்து வந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இந்த வசதிகளை மேம்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து தனியார் பஸ்கள் இப்பகுதியில் இயங்கி வந்தன.
இதனால் பொதுமக்கள் பயணிக்க ஏதுவாக இருந்தது.இப்பகுதி மக்கள் அரசு அலுவலகங்களுக்கு வர வேண்டும் என்றல் சுமார் 80 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனியார் போக்குவரத்தும் தற்போது முடங்கி விட்டதாக கூறப்படுகிறது.இதனால் இப்பகுதி மக்கள் பெரும் சிக்கல்களை அனுபவித்து வருகின்றனர். அரசு சார்பில் மினி பஸ் இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
- கட்டுமானப்பணி நீண்ட நாட்களாக ஒரே நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறினர்.
- சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி உட்பட பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.
அவினாசி:
குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நபார்டு மற்றும் ஆர்.ஐ.டி.எப்., திட்டத்தில், அவிநாசி மற்றும் திருப்பூர் ஒன்றியத்தை சார்ந்தகிராமங்களுக்கென ரூ.362 கோடி செலவில் கூட்டு குடிநீர் திட்டம் வடிவமைக்கப்பட்டு, கடந்த 2020ல் பணி துவங்கியது.அவிநாசி ஒன்றியத்தில், சின்னேரிபாளையம், குப்பாண்டம்பாளையம், புதுப்பாளையம், வேட்டுவபாளையம் உள்ளிட்ட சில ஊராட்சிகளை உள்ளடக்கி நடந்து வருகிறது.
இதில் சின்னேரிபாளையம் பகுதியில் கட்டுமானப்பணி நீண்ட நாட்களாக ஒரே நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறினர்.
இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களை உள்ளடக்கி, ஒவ்வொரு ஒப்பந்ததாரர் மூலம் பணி நடந்து வருகிறது. அதன்படி, சின்னேரிபாளையம் கிராமத்தில் குடிநீர் தேக்க தொட்டி உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மற்ற கிராமங்களில் ஒப்பந்ததாரர் மூலம் கட்டுமானப்பணி நடந்து வருகிறது.அனைத்து இடங்களிலும் பணி முடிந்தவுடன் ஒரே சமயத்தில் சுண்ணாம்பு அடித்து வர்ணம் பூசும் பணி துவங்கும். இக்கூட்டு குடிநீர் திட்டத்துக்கென, நரியம்பள்ளியில் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி உட்பட பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உடுமலையில் 3 மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிகள் ஆதிதிராவிட நலத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
- மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிகளில் உள்ள குறைபாடுகளை தெரிவிக்கவும் வழியில்லை.
உடுமலை,
உடுமலை வருவாய் கோட்டத்திலுள்ள உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் ஆதிதிராவிடர்கள் கணிசமான அளவு வசிக்கின்றனர். இவர்களது வாழ்வாதார முன்னேற்றத்திற்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.குறிப்பாக ஆதிதிராவிட மாணவர்கள் கல்விக்காக தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு, அரசால் பராமரிக்கப்படுகின்றன.
உடுமலையில் 3 மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிகள் ஆதிதிராவிட நலத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு, முக்கியத்துவம் வாய்ந்த இந்த துறையின் பணிகளை கண்காணிக்க வேண்டிய தனி தாசில்தார் பணியிடம் உடுமலை வருவாய் கோட்டத்தில், உருவாக்கப்படவில்லை.தற்போது துறை திட்டங்களுக்கு விண்ணப்பம் அளிப்பவர்கள் காங்கயத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிக செலவிட்டு, காங்கயம் சென்று வருவதில் சிக்கல் நிலவுவதால், பல்வேறு அரசுத்திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் அதிகளவு பெறப்படுவதில்லை.மேலும் பல கிராமங்களில், நிலம் கையகப்படுத்தப்பட்டு, ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டமும் தொய்வடைந்துள்ளது.
இது குறித்து அரசுக்கு பொதுமக்கள் அனுப்பியுள்ள மனுவில், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலிருந்து, ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டு மனை உட்பட நலத்திட்டங்களுக்கு விண்ணப்பம் அளிக்க காங்கயம் செல்ல வேண்டியுள்ளது.மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிகளில் உள்ள குறைபாடுகளை தெரிவிக்கவும் வழியில்லை. அனைத்து பணிகளுக்கும் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்து அங்கிருந்து காங்கயம் தனிதாசில்தாருக்கு அவ்விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.இந்த நடைமுறையால், நலத்திட்டங்கள் உடனடியாக கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம், தனி தாசில்தார் பணியிடத்தை உருவாக்கி அலுவலர் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் சிறப்பு பெற்ற மாதா பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்கார வேலவர் கோவில் உள்ளிட்ட மும்மதத்தினரும் வழிபட்டு செல்லும் முக்கிய இடமாக உள்ளது. நாகைக்கு வெளியூர், வெளி மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.
நாகை பழைய பஸ்நிலையத்தில் இருந்து அக்கரைப்பேட்டை வழியாக வேளாங்கண்ணிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் தோணித்துறை அருகே ரெயில்வே கேட் மேம்பால பகுதி உள்ளது. நாகை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தோணித்துறை சாலை வழியாக அக்கரைப்பேட்டை, கல்லார், தெற்கு பொய்கைநல்லூர் மற்றும் வேளாங்கண்ணிக்கு இந்த சாலையை தான் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் நாகை துறைமுகத்தில் இருந்து மீன்களை சரக்கு வேன், ஆட்டோக்களில் ஏற்றி இந்த வழியாக தான் மீனவர்கள் உள்ளூர், வெளியூர், வெளி மாநிலங்களுக்கு வாகனங்களில் கொண்டு செல்கின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை சேதமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. தற்போது மழை பெய்து வருவதால் பள்ளங்களில் மழைநீர் தேங்கி குட்டை போல் காணப்படுகிறது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ள சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கும் போது அக்கரைப்பேட்டை, தோணித்துறை ரெயில்வே மேம்பால பணிகள் நடைபெறுவதை காரணம் காட்டி சாலையை சீரமைப்பதை தாமதப்படுத்தி வருகின்றனர்.
எனவே, தோணித்துறை ரெயில்வே மேம்பாலம் அருகே உள்ள குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்